
கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் எந்தவொரு நிகழ்வு அல்லது கூட்டங்களை நடத்த வேண்டுமானாலும் அனுமதி பெறுவது அவசியமாகும். இதுவரை இந்த அனுமதியைப் பெற ஆனைமலையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மலையகப் பகுதியிலிருந்து ஆனைமலைக்குச் சென்று வருவது மிகுந்த கால விரயத்தையும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தி வந்தது.
இதுகுறித்து நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்
இந்நிலையில்
இந்தச் சிக்கலைத் தீர்க்கும் பொருட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் இனிமேல் உரிய அனுமதிகளை வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
இந்த அதிரடி மாற்றத்திற்குப் பிறகு வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பரமசிவம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது
மக்களின் சிரமத்தைப் புரிந்து கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்த மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், வால்பாறை சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்தப் பிரச்சனையை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.
அரசு வழங்கியுள்ள இந்த எளிமையான நடைமுறையைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களுக்குத் தேவையான அனுமதிகளை வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.





