ஒரே ராகத்தை 5 நாட்கள் தொடர்ந்து பாடிய இசை மேதைக்கு மணிமண்டபம் அடிக்கல் நாட்டியும் கட்டப்படவில்லை – மணிமண்டபம் வேண்டும்


இசை உலகில் தனக்கென்று தனி வழி வகுத்துக் கொண்டு வாழ்ந்து வந்த தெய்வீக இசை மேதை இவர் கடல்குடி என்னும் கிராமத்தில் சோமசுந்தரர் ஜெகவீரா கஞ்சசெய பாண்டியன் என்னும் பாளையக்காரரின் ஐந்தாவது மகனாக 1889 இல் பிறந்தவர் இவர் முழு பெயர் நல்லப்பசாமி பாண்டியர். சுவாமி நல்லப்ப சாமி தமிழ்நாட்டிலும் வெளி உலகிலும் விளாத்திகுளம் சாமிகள் என்று மக்களால் பாராட்டப்பட்டு வந்தார் சாமிகள் தமிழிசை ஆங்கில ஹிந்துஸ்தானிய இசைகளோடு ஒப்பிட்டு அதைப்போலவே பாட வல்லவர் கர கர ப்ரியா ராகத்தின் சக்கரவர்த்தி என கலை உலகில் அவரை பாராட்டி 1960 ஆம் ஆண்டு மிகப்பெரிய விழாவை கோவில்பட்டியில் அருணாசலம் நடத்தினார்1947 இல் ஆங்கிலேயர் அரசு இவருக்கு ராக சக்கரவர்த்தி பட்டம் வழங்கியது.

1949 சென்னை மியூசிக் அகடமி விருப்பப்பட்ட இசை சக்கரவர்த்தி பட்டமும் வெள்ளியினால் ஆன முருகன் சிலையையும் வழங்கியது தமிழிசை வளர்ச்சிக்கு தன் மூதாதையார் சொத்துக்களையும் தன் இசைக்கும் செல்வந்தர்களும் தந்த நிலங்கள் பரிசுகள் பிற சொத்துக்களையும் வெகுமதியாகவும் அவ்வப்போது அங்கங்கே தென்படும் ஏழைகளுக்கு வாரி வழங்கி தமிழிசை துறவியாக வாழ்ந்து வந்தவர் இவர் ஒரே ராகத்தை மூன்று நாட்கள் பாடிய இசை அறிஞர் லட்சுமணரை வென்று ஒரே ராகத்தை 5 நாட்கள் தொடர்ந்து பாடி மைசூர் மன்னரிடம் வெகுமதியும் பரிசுகளும் பெற்றர் அதையும் அங்குள்ள ஏழைகளுக்கு வழங்கியவர்

விளாத்திகுளம் சாமிகளை போல் ராகங்களில் மட்டுமல்லாமல் சுரங்களிலும் நவரசங்களை காட்டும் அதிசயத்தை எங்குமே யாரிடத்திலும் கண்டதே இல்லை தமிழிசையே கர்நாடகா இங்கிலீஷ் இந்துஸ்தானிய இசைகளோடு ஒப்பிட்டு அதைப்போலவே பாடி காட்ட வல்லவரகவும்
விளாத்திகுளம் சாமிகளின் மூதாதையர் நிலம் ஏழைகளுக்கு தந்தது போக 56 சென்ட் நிலம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள சாமிகளின் பாட்டனார் பெயரிட்ட சாலையன் தெருவில் உள்ள கம்மாய் கரை மேட்டில் இடதுபுறம் உள்ளது இங்கு சாமிகளின் நினைவு சமாதியும் சிலையும் உள்ளன வளாகத்தினுள் இசை ஆராதனை விழாவும் குரு பூஜையும் அன்னதானமும் வருடம் தோறும் நடைபெறும் 1988 செப்டம்பரில் விளாத்திகுளம் நடந்த சாமிகள் நூற்றாண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆறுமுகம் அவர்கள் சாமிகளை அடக்கம் செய்த சமாதி உட்பட 56 சென்ட் இடமும் சாமிகள் பெயரில் மணிமண்டபத்திற்கும் தமிழ் இசை வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும் சாமிகள் பயன்பாட்டிற்கே வளாக முழுமையாகவும் பயன்படுத்தப்படும் என்று வாக்காணை வெளியிட்டார்.

சாமிகளின் நினைவு ஆராதனை மற்றும் இசை விழா 25.4/2010 ஞாயிறு அன்று விளாத்திகுளம் சாமிகள் நினைவாலய வளாகத்தில் நடைபெற்றது இதில் அப்போதைய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்க இருந்த கீதாஜீவன் அவர்கள் சாமிகளின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் பழனியாண்ட்டி தலைமையில் தாங்கி விழா நடைபெற்றது.

அதன்படி சாமிகளுக்கு மணிமண்டபம் எழுப்புதல் இசைப்பள்ளி சாமிகள் பெயரில் இசைக்கல்லூரி அமைத்தல் இசை தட்டுகளை அரசுடமையாக்கி வெளியிடல் ஆண்டுதோறும் இசை விழா நடத்துதல் சாமிகளுக்கு என பல கோரிக்கைகளை அரசினர் செய்ய வேண்டி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் மற்றும் சாமிகள் வாரிசுதாரர்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர் அதே போல் இந்த வருடமும்..,…. (25.4.2024) நடைபெற்ற குரு பூஜை விழாவில் நல்லப்பசாமி திருவுருவ படத்திற்கு எம்எல்ஏ மார்க்கண்டயன் அவர்களால் மலர் தூவி மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது அதேபோல் இந்த வருடம் ( 25.4.26) நெல்லையப்ப சாமி வாரிசு பால்ராஜ் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாலை தூவி மரியாதை செலுத்தினார்கள் வரலாற்று நூல் ஆசிரியர் என் ஏ எஸ் சிவக்குமார் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ராமர் இசைக்குழு மற்றும் இசை ஆர்வாளர்கள் சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களின் கோரிக்கை இந்த இடத்தில் மணிமண்டபம் நல்லபசாமியார் அவர்களுக்கு அமைக்க வேண்டும் என்பதே ஆகும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts