
தூத்துக்குடி மாவட்டம், தேன்பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் இவர் தனது மகன் மணிகண்டனை தைவான் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து மகனை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எனது மகன் மணிகண்டன் (22), ஐ.டி.ஐ. படிப்பை முடித்துள்ளார். கோவில்பட்டி – பசுவந்தனை சாலையில் செயல்பட்டு வரும் Subi Live Tech நிறுவனம், VMS Consultancy மூலம் தைவான் நாட்டில் தக்காளி பேக்கிங் வேலைக்கு மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், தங்கும் வசதி மற்றும் உணவை நிறுவனமே வழங்கும் என்றும் விளம்பரம் செய்திருந்தது.
இதனை நம்பிய எனது மகன் வேலைக்காக அணுகியபோது, அங்கு பணிபுரியும் சக்தி என்ற பெண், வேலை கிடைக்க ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து குடும்ப நகையை அடமானம் வைத்து பெற்ற ரூ.4 லட்சத்தை, 08.12.2025 அன்று நிறுவனத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பின்னர், 14.02.2026 அன்று எனது மகனை தைவானுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், கூறியபடி ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளமும் வழங்கப்படவில்லை. தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் எனது மகன் கடும் சிரமத்திலும், பசியாலும் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு விசாவிற்கு பதிலாக சுற்றுலா (Tourist Visa) விசாவில் அனுப்பப்பட்டதாகவும், தற்போது தைவானில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது எந்த காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது கூட எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை.
எனவே, தங்களது மகனை உடனடியாக இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரூ.4 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் Subi Live Tech நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தருவதோடு, இதேபோல் பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி, நிறுவனத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி : முத்துராமலிங்கம், மணிகண்டனின் தந்தை…
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.







