
பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோமங்கலம்புதூர் பகுதியில் திறக்கப்படவுள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யவேண்டும் எம்எல்ஏ நித்தியானந்தம் சார்-ஆட்சியருக்கு கோரிக்கை மனு திங்கள்கிழமை அளித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது…பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கோமங்கலம்புதூர் என்ற இடத்தில் புதிய புறவழிச்சாலை பிரதான சாலையுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி புதிதாக அமைக்கப்பட்ட பைபாஸ் சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். ஆனால், தற்போதைய அமைப்பின்படி தங்களின் பழைய பிரதான சாலையை பயன்படுத்தும் உள்ளூர் கிராம மக்கள் வாகனங்களுக்கும் கட்டாயமாக சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பைபாஸ் சாலையின் உள்ள சுங்கச்சாவடியை அமைக்காமல் அது பழைய பிரதான சாலையோடு இணையும் கோமங்கலம்புதூர் சந்திப்பில் அதாவது பழைய பொள்ளாச்சி-உடுமலை சாலையில் அமைப்பது பொதுமக்களையும், உள்ளூர் விவசாயிகளையும் பாதிக்கும். மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். எனவே புதிய பைபாஸ் சாலையில் சுங்கச்சாவடியை அமைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள்
செய்தியாளர்
உங்கள்
STAR M.சுரேஷ் குமார்








