தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய கிணறு மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு!!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய கிணறு ஒன்றினை அமைத்து மேலும் அந்த கிணற்றில் தானியங்கி நீர் மீட்டர்களும் பொருத்தப்பட உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் எந்த நேரத்திலும் பேருந்து நிலைய சுகாதார வளாகங்களில் நீர் கிடைப்பதற்காக பொருத்தியுள்ளனா். பின்னா் ேமயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை அதிகாிப்பு 2 3 சக்கர வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மூலம் பயனாளிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனா்.

அதற்கு ேதவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் கழிப்பிட வசதிகள் மற்றும் அதே மாடியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி புறக்காவல் நிலையமும் செயல்படுகிறது. அதற்குாிய குடிதண்ணீா் வசதியும் செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக அனைவருடைய நன்மையை கருதி புதிய கிணறு ஓன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் எந்தநேரமும் தண்ணீர் எடுத்து தட்டுபாடு இல்லாத வகையில் பயன்படுத்தி கொள்வதற்கு புதிய ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

இது போன்று பல்வேறு புதுமையான திட்டங்களை எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி பொதுமக்களுக்காக செய்து வருகிறோம். இதை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று தொிவித்தாா். உடன் உதவி செயற்பொறியாளர் ராேஜஷ்கண்ணா, பகுதி செயலாளா்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன் போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் உள்பட பலர் உடனிருந்தனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts