
கோவை: இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு சார்பில் 8வது உழவே தலை என்ற விவசாயிகளுக்கான கருத்தரங்கம் வருகிற 10-ஆம் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது.
அக்ரி இன்டெக் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கருத்தரங்கில் 4 வகையான தலைப்பின் கீழ் 10க்கும் மேற்பட்ட விவசாய துறை அறிஞர்கள் பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு நாள் நடைபெறும்
கருத்தரங்கில் வேளாண் சுற்றுலா தலைப்பில் தமிழ்நாடு மாநில வேளாண் சுற்றுலா விருது பெற்ற விவசாயும், தமிழ் நிலம் தமிழ் பண்ணை நிறுவனருமான இறையழகன், கம்பம் பகுதியைச் சேர்ந்த திராட்சை தோட்ட நிறுவனர் மனோகரன், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் சுற்றுலா திட்டத்தின் நிர்வாக இயக்குனர் பாண்டுரங்க திவரா ஆகியோர் தங்களது அனுபவத்தை பகிர்கின்றனர்.
மேலும் தென்னை மற்றும் ஊடுபயிர் என்ற தலைப்பின் கீழ் தமிழ்நாட்டின் கோக்கோ செயல்பாட்டின் மேலாளர் சிவக்குமார், மங்களூர் கேம்கோ துணைத் தலைவர் பத்மராஜ் பட்டா ஜே, பொள்ளாச்சி விவசாயி பச்சையப்பன் ஆகியோர் கலந்துரையாட உள்ளனர்.
இந்தக் கருத்தரங்கம் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது விவசாயத் தறையில் ஆர்வமுள்ள
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.









