
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஆசிாியா் காலனி மெயின் ரோடு ரவுண்டானா அருகில் சுமார் 20 வருடங்களாக தனி நபர் ஒருவர் தொடர்ந்து ஆக்கிரமித்து செய்து வந்தார் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்து கொள்வார் இது தொடர் கதையாகவே இருந்து வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்ற பின்பு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று மாநகராட்சி சார்பில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டது ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததால் இதுபோல பலமுறை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்ததையடுத்து கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு இடத்தை அதிரடியாக அகற்றியது. இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்பட்டது அதன்படி அந்த இடத்தில் சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உடனடியாக அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
இதனையடுத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆசிாியா் காலனி மெயின் ரோட்டில் ரவுண்டானா ஆக்கிரமிப்பு மீட்கப்பட்ட இடத்தை மேயர் ஜெகன் பொியசாமி நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு சாலையை விரிவாக்கம் செய்து ரோடு அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார் இரண்டு தினங்களில் இந்த இடத்தில் சாலை அமைத்திருக்க வேண்டும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி பகுதியில் நான் பொறுப்பேற்ற பின்பு மாநகாட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து சுமாா் 75 கோடி மதிப்புள்ள இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினா் நலனையும் கருத்தில்கொண்டு எதிர்கால தலைமுறையினா் நலனும் மாநகராட்சி பகுதி மக்களின் நன்மை கருதியும் பணியாற்றி வருகிறோம்.
இந்நிலையில் கடந்த 20 வருட காலமாக தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்தால் எந்த ஒரு மாநகராட்சி நிா்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஆக்கிரமிப்பாகற்றப்படும் மீண்டும் ஆக்கிரமிப்பாளர் ஆக்கிரமிப்பு செய்வார் இதுதான் தொடர் கதையாகி வந்த நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அதிரடியாக ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இதுபோன்று ஆக்கிரமிப்பாளர்கள் தானாக முன்வந்து மாநகராட்சி இடத்தை தங்களிடம் ஓப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின் போது செயற்ெபாறியாளர் லெனின், மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.








