வெள்ளலூர் குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி..!!

கோவை மாவட்டம் போத்தனூர்: கடந்த பல நாட்களாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருந்து வீசும் கடும் துர்நாற்றம், மகாலிங்கபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிச்சி வெள்ளலூர் மாசுக்கட்டுப்பாட்டு கூட்டுக் குழு செயலாளர் மோகன் மற்றும் உறுப்பினர்கள்
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இன்று காலை ஆணையர் அவர்கள் மகாலிங்கபுரம் பகுதிக்கு நேரில் வருகை தந்து நிலைமையை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, குப்பை மற்றும் துர்நாற்றப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனில், அந்தந்த பகுதிகளிலேயே அறிவியல் அடிப்படையில் குப்பைகளை செயலாக்கும் பரவலாக்கப்பட்ட (Decentralized) திடக்கழிவு மேலாண்மை முறையை உடனடியாக அந்தந்த பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிச்சி மற்றும் வெள்ளலூர் மாசுக்கட்டுப்பாட்டு கூட்டுக் குழு செயலாளர் மோகன் மற்றும் குழுவினர் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளது .

மேலும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தொடர்ந்து கலப்புக் கழிவுகள் குவிக்கப்படுவதால் கடும் துர்நாற்றம் மட்டுமல்லாமல், குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுநீர் (Leachate) காரணமாக நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் தீவிரமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம். இதனால் மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர் ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தோம்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும், நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணையர் அவர்களிடம் குறிச்சி வெள்ளலூர் மாசுக்கட்டுப்பாட்டு குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts