அரசியல் சண்டையில் மறக்கப்படும் மக்கள் உரிமைகள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை!!


தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இன்று நாட்டின் நடப்பை பார்த்தால் ஒரு கேள்வி மட்டும் நமக்கு முன் நிற்கிறது. ஒரு பக்கம் கரூா் விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஒரு பக்கம் எம்.எல்.ஏக்களை விலை பேசினார்கள் என்ற பெரிய குற்றச்சாட்டு நீதிமன்ற வாசலை எட்டியுள்ளது. மற்றொரு பக்கம், விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு போராடும் நிலை தொடர்கிறது. இன்னொரு பக்கம், குடிநீர் கூட சரியாக கிடைக்கவில்லை என்று மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். இதெல்லாம் தனித்தனி செய்தி அல்ல. இவை அனைத்தும் ஒரே உண்மையைச் சொல்கின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மக்களின் பிரச்சனை பின்னால் தள்ளப்பட்டு, அரசியல் சண்டை முன்னால் ஓடுகிறது. எம்.எல்.ஏ வாக்கு விற்பனைக்கல்ல. விவசாயிகளின் கண்ணீர் அரசியல் பொருள் அல்ல. குடிநீர் கேட்கும் மக்களின் போராட்டம் சட்ட ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல அது குற்றச்சாட்டு வந்தால் நேர்மையான விசாரணை நடக்க வேண்டும். குற்றம் செய்தவர் சட்டம் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றமற்றவர் அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்படக்கூடாது. ஆனால் இதைவிட முக்கியமான ஒன்று இருக்கிறது.

அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் போது, விவசாயி கடன் சுமையில் இருக்கிறார். சாதாரண மக்கள் தண்ணீருக்காக தெருவில் நிற்கிறார்கள். இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கிறார்கள். சட்டம் அரசியலுக்கு அடிமை ஆகக்கூடாது. அரசியல் மக்களின் உரிமைக்கு சேவை செய்ய வேண்டும். மக்கள் வாக்கை விலை பேச முடியாது. மக்கள் பிரச்சனையை அலட்சியம் செய்ய முடியாது. மக்கள் உரிமையை யாரும் மவுனப்படுத்த முடியாது. அரசியல் வெல்லலாம் ஆனால் மக்கள் உரிமை தோற்கக்கூடாது. என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts