
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு திரேஸ்புரம் முதல் பனிமயமாதா ஆலயம் வரை ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது இந்த பணி விரைவாக நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாதா கோவில் முன்பு நடைபெறுகின்ற பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிகளை பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் வரும் 26ம் தேதி மாதா கோவில் திருவிழா ஆரம்பமாகிறது அதற்குள் விரைவாக பணியை முடிக்க வேண்டும் தரமான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலும் பேவர் பிளாக் கல் பதிக்கும் விபரங்களையும் கேட்டறிந்தார் பணிகள் முடிந்த பிறகு மேடு பள்ளம் இருக்கக் கூடாது காலி இடத்தில் இருக்கும் மணல்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் மாதா கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது என்று ஒப்பந்ததாரரிடம் கூறினார்.
பின்னா் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் திரேஸ்புரம் முதல் பணிமயமாதா ஆலயம் வரை ரோட்டில் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி 95 சதவீதம் நிைறவடைந்துள்ளது. மீதி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்னும் ஒரு சில நாட்களில் பணிகள் முழுவதும் நிறைவடைந்துவிடும் பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தினசரி பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் திருவிழாவின் முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள் அதற்காக பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ரோட்டின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது மாநகராட்சி சாா்பில் ேதவையான அடிப்படை பணிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். என்று கூறினார்.
உடன் மாநில மீனவர் அணி துணைச்செயலாளர் புளோரன்ஸ் மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல் பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பா், பகுதி அணி அமைப்பாளர் எமல்டன் மற்றும் ஆர்தர் மச்சாது உள்பட மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.





