​வால்பாறையில் கூடுதல் பெட்ரோல் பங்க் திறக்கக் கோரிக்கை கோவை மாவட்ட ஆட்சியருக்கு சிபிஐ(எம்) கடிதம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வால்பாறை பகுதியில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் அங்குள்ள பழைய பெட்ரோல் பங்கை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து சிபிஐ(எம்) வால்பாறை செயலாளர் பி. பரமசிவம் விடுத்துள்ள கோரிக்கை மனுவின் விவரம் பின்வருமாறு

ஆழியாரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியான வால்பாறையில் தற்போது ஒரே ஒரு பெட்ரோல் பங்க் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மலைப்பிரதேசம் என்பதால் இங்கு அரசுப் பேருந்து போக்குவரத்து வசதி குறைவாகவே உள்ளது.

இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் வால்பாறை பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக இருசக்கர வாகனம், ஆட்டோ, வேன், கார் போன்ற சொந்த வாகனங்களையே பெரிதும் சார்ந்துள்ளனர். ஆனால் ஒரே ஒரு பெட்ரோல் பங்க் மட்டுமே இருப்பதால் எரிபொருள் நிரப்புவதற்கு அவர்கள் தினந்தோறும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காலங்களில் தற்போதிருக்கும் பெட்ரோல் பங்கில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் அங்கு பொதுமக்களுக்கான கழிப்பிட வசதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வால்பாறை கீழ் பேருந்து நிலையம் அருகே முடிஸ் செல்லும் வழியில் சுமார் 20 அடி தொலைவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் கடந்த பல வருடங்களாகச் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாகப் பூட்டிக்கிடக்கும் அந்த பெட்ரோல் பங்கை மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் பொதுநலத்தோடு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts