பட்டா முதல் ரேஷன் கார்டு வரை நேரத்தில் சேவை பெறுவது மக்கள் உரிமை! – சட்ட உரிமைகள் கழகம்!!

ரேஷன் கார்டு, பட்டா, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பதிவு அலுவலக சேவை போன்ற அடிப்படை அரசு சேவைகளுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. சில நேரங்களில் கோப்புகள் நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. அந்தத் தாமதத்திற்கு யார் பொறுப்பு? சேவை எப்போது கிடைக்கும்? தாமதமானால் யாரிடம் புகார் அளிக்கலாம்? என்ற தெளிவான நடைமுறை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையை மாற்றுவதற்காகவே தமிழ்நாட்டில் Right to Services Act வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும். இந்தச் சட்டம் வந்தால், ஒவ்வொரு அரசு சேவைக்கும் தனித்தனி காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு சான்றிதழ் 15 நாட்களுக்குள், ஒரு அனுமதி 30 நாட்களுக்குள், ஒரு பதிவு சேவை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், அந்தச் சேவைக்கு எந்த அதிகாரி பொறுப்பு என்பதும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும்.

சேவை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கிடைக்கவில்லை என்றால், பொதுமக்களுக்கு மேல்முறையீடு செய்ய எளிய வழி இருக்க வேண்டும். தவறான காரணங்களால் சேவையை தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு அபராதம், சம்பளக் கழிவு அல்லது ஒழுங்கு நடவடிக்கை போன்ற தண்டனைகள் விதிக்கும் நடைமுறையும் இருக்க வேண்டும். அரசு “இந்தச் சட்டம் வரும்” என்று அறிவிப்பது மட்டும் போதாது. நவம்பர் மாதத்துக்குள் இந்தச் சட்டத்தை கொண்டு வந்து, எந்த சேவைக்கு எத்தனை நாள் காலக்கெடு, எந்த அதிகாரி பொறுப்பு, தாமதமானால் என்ன நடவடிக்கை, மக்கள் எங்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற முழுமையான நடைமுறையையும் தயார் செய்ய வேண்டும். இல்லையெனில், இது மக்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியாக மட்டும் மாறிவிடும்.

நவம்பர் deadline என்பது அரசுக்கு கொடுக்கப்பட்ட ஒரு காலக்கெடு மட்டுமல்ல; அரசு அலுவலக வாசலில் காத்திருக்கும் ஏழை மக்களின் பொறுமைக்கும் ஒரு கடைசி எல்லை. ரேஷன் கார்டு, பட்டா, சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற சேவைகள் பொதுமக்களுக்கு நேரத்தில் கிடைக்க வேண்டும். சேவை தாமதமானால் அதிகாரி பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்காகவே Right to Services Act தமிழ்நாட்டில் உடனடியாக வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும்.

Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர்
நிறுவனத் தலைவர்
சட்ட உரிமைகள் கழகம்                                                                                                                                                    92800 98405

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts