ரீல்ஸ் எடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவியிடம் மனிதாபிமானமின்றி அமைச்சர் நடந்து கொண்டதாக கடும் கண்டனம்!!

ரீல்ஸ் எடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவியிடம் மனிதாபிமானமின்றி அமைச்சர் கீர்த்தனா நடந்து கொண்டதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளி ஒன்றில் அண்மையில் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம் போட்டு மாண்பைச் சீர்குலைத்த நிலையில், அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறி, தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளி மாணவியிடம் அராஜக போக்குடன் கேள்வி கேட்டு ஆசிரியர்களையும் அதட்டும் தொனியில் நடந்து கொண்டது மனிதாபிமானம் அற்ற செயல். ஓர் அரசுப் பள்ளிக்கு அமைச்சரோ, ஆட்சியரோ வருகிறார்கள் என்றால் இயல்பாகவே பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அச்சம் தொற்றிக் கொள்ளும்

அத்தகைய சூழலில் அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான கும்பல், ரீல்ஸ் எடுப்பதற்காகப் பள்ளிக் குழந்தையிடம் தடபுடலான கேள்வியைக் கேட்டால் எந்தக் குழந்தைக்குத் தான் பதற்றம் வராது. அதுமட்டுமின்றி கடைசி பெஞ்ச் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் என்ற பிற்போக்குத்தனமான சினிமா வசனங்களைப் பேசி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.

குழந்தைகளின் புகைப்படத்தைப் பொதுத் தளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்பது அமைச்சருக்குத் தெரியாதா? எந்தக் குழந்தைகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்களோ, அந்தக் பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலில் தவெக அரசு இறங்கியிருப்பது கண்டனத்துக்குரியது” என்று சாடியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செயலாளர்

-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts