விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!

சீறிப்பாய்ந்து வந்த 60 காளைகளை வீரத்துடன் அடக்கிப் பிடித்த மாடுபிடி வீரர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவில் ஆனி மாத கோவில் கொடை விழாவை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமார் 200 ஆண்டுகளாக தோன்றுதொட்டு மாபெரும் எருது கட்டு விடும் விழா நடைபெற்று வருகிறது,இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழாவில், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 காளைகள் போட்டியில் களம் இறக்கப்பட்டன, சுமார் 4 குழுவாக 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தர்ம முனிஸ்வரர் கோவிலில் இருந்து எருது கட்டும் வடத்தை பூஜை செய்த பின்பு, ஜிம்ளா கொட்டு பாரம்பரிய மேளம் வான வேடிக்கையுடன் வடம் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட வடத்தை,வாடிவாசலில் இருந்து புறப்படும் காளையின் கழுத்தில் கட்டப்பட்டு, காளையின் உரிமையாளரால் கட்டப்பட்ட கயிறு அவிழ்த்து விட்டவுடன், வடத்துடன் காளை மைதானத்துக்குள் சீறிப்பாய்ந்து, கொம்புகளை தரையில் ஊனி ஆக்ரோசத்துடன் வந்த காளைகளை மைதானத்துக்குள் ஒவ்வொரு குழுவாக இருந்த மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பிடித்தனர்.

இதில் 30-க்கும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது,காயம் ஏற்பட்ட வீரர்களுக்கு விழா நிர்வாகம் சார்பில் முதலுதவி மருத்துவ சிகிச்சை வழங்கபட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் மட்டுமே எருது கட்டு விடும் விழா 200 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாபெரும் எருது கட்டு விடும் விழாவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, ஊர் தலைவர் லிங்கம், விஸ்வநாதன்,எருதுகட்டு விழா தலைவர் சரவணன், செயலாளார் கோபால், ஊர் கணக்காளர் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் பாபு செல்வகுமார்,பொன்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு ஆனந்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts