போதை இல்லா தமிழகம் பொள்ளாச்சியில் We the Leaders மாநாடு பிரம்மாண்டம் 1.5 லட்சம் புதிய தலைவர்களை உருவாக்க இலக்கு!!

​பொள்ளாச்சி
தமிழகத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் WTLF சார்பில் போதை இல்லா தமிழகம் We the Leaders மாநாடு பொள்ளாச்சியில் நேற்று மாலை மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய முக்கிய நிர்வாகிகள் தமிழகத்தின் எதிர்கால நலன் குறித்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் சமூக மாற்றத்திற்கான செயல்திட்டங்களையும் வெளியிட்டனர்.

மாநாட்டில் பேசிய நிர்வாகிகள் தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமானால் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இது அரசின் பொறுப்பு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்தின் சமூகப் பொறுப்பு என்று வலியுறுத்தினர்.

இதன் தொடக்கமாக ஜூலை 2026 முழுவதும் White Band மாதம் என்ற மக்கள் இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஜூலை மாதமும் போதை விழிப்புணர்வு மாதம் ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு இந்த இயக்கம் ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம் மற்றும் கல்வி நிலையங்கள் வரை கொண்டு செல்லப்படும் என உறுதி ஏற்கப்பட்டது. இந்த இயக்கத்தில் இணைந்துள்ளவர்களில் 17% பேர் பெண்கள் என்பது சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் சான்றாகக் சுட்டிக்காட்டப்பட்டது.

சமூக மாற்றம் என்பது போதை ஒழிப்போடு மட்டும் நின்றுவிடாமல் அடுத்தடுத்த மாதங்களில் தொடர் இயக்கமாக முன்னெடுக்கப்படவுள்ளது
​ஆகஸ்ட் மாதம் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்) தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட மக்கள் இயக்கம் நடத்தப்படும்.
​அக்டோபர் 15, 2026 (அப்துல் கலாம் பிறந்தநாள்) அன்றைய தினம் A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics முறைப்படி தொடங்கப்படும். இதன் மூலம் நற்பண்புகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு அடுத்த ஓராண்டுக்குள் 1.5 லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம் சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து நேரடியாகப் பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம் என்று மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.

மாற்றம் என்பது யாரோ ஒருவரால் உருவாவது அல்ல ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். மாறுவோம் மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் மாநாடு நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

உங்கள் செய்தியாளர் உங்கள்

-STAR M.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts