கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிப்பு!!

கந்தர்வகோட்டை ஜீலை 14

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக மக்கள் தொகை தினம் குறித்து பேசும்பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மக்கள் தொகை விழிப்புணர்வு என்பது வெறும் எண்ணிக்கை சார்ந்த கட்டுப்பாடு மட்டுமல்ல, இது மனித வள மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.
ஆண்டுதோறும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலின சமத்துவம், வறுமை, தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் போன்ற உலகளாவிய மக்கள் தொகை பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவாக மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts