
கந்தர்வகோட்டை ஜீலை 15
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் 124வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கல்விக்கண் திறந்த மாமேதை காமராஜர் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் குறித்து பேசும் பொழுது;
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, ‘கல்வி வளர்ச்சி தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்தால் அது நிச்சயம் காமராஜராகத் தான் காட்சியளிக்கும் என்று தலைவர்களால் புகழப்பட்டவர்.
பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி மாணவர்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்த, இலவச சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கினார். இவரது ஆட்சிக்காலத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மேட்டூர் அணையின் நீர்மின் திட்டம், குந்தா திட்டம் மற்றும் பல்வேறு பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு தமிழகம் தொழில் துறையில் வளர்ச்சி கண்டது.
பாரத ரத்னா: நாட்டுக்கு ஆற்றிய தொண்டிற்காக 1976-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி மகிழ்கிறோம். காமராஜர் கண்ட கனவை ஒவ்வொரு மாணவரும் நிறைவேற்ற வேண்டும் எனவும், காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாறை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் செல்விஜாய், கௌரி, கணினி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.






