
124 மாணவர்கள் இணைந்து 430 சதுர அடியில் உருவாக்கிய பிரம்மாண்ட காமராஜர் ஓவியம்!
கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா விழாவில் 124 மாணவர்கள் இணைந்து ,உருவாக்கிய பிரம்மாண்ட ஓவியம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டம்,கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக விழாவில் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன்,நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்தி்ரன்,செயலர் ரவிக்குமார், மற்றும் முதல்வர் சரண்யா,வித்யாஸ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா மற்றும் பலர் இணைந்து காமராஜர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவின் ஒரு பகுதியாக , 124 மாணவர்கள், 124 வெள்ளை அட்டைகளை இணைத்து, காமராஜரின் உருவப்படத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக வரைந்தனர்.
பின்னர், அந்த அனைத்து ஓவியத் துண்டுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே இடத்தில் நின்று பிரம்மாண்டமான காமராஜர் மெகா ஓவியத்தை உருவாக்கி காட்சிப்படுத்தினர்..
நூற்றுக்கும் மேற்பட்ட காமராஜர் வேடமிட்ட சிறு குழந்தைகள் நடுவே,
மாணவர்களின் ஒருங்கிணைப்பு, துல்லியம் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்திய காமராஜரின் மெகா ஓவியம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பள்ளி வளாகத்தின் மேலிருந்து பதிவு செய்யப்பட்ட இதன் கழுகுப் பார்வை (ட்ரோன்) காட்சிகளில், முழுமையான காமராஜரின் உருவம் மிகவும் நேர்த்தியாக வெளிப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருந்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக மாணவர்களுக்கான பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
விழாவில் பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள்,முன்னால் மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






