
நாட்டை ஆளுபவர்களுக்குப் புள்ளிவிவரங்களும் பட்டப் படிப்புகளும் இருப்பதை விட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற தூய்மையான எண்ணமே மிக முக்கியம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் தமிழகத்தின் பொற்கால ஆட்சியைத் தந்த பெருந்தலைவர் காமராஜர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்றைய அரசியல் சூழலில் தலைவர்களின் கல்வித் தகுதி குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்தாலும் மக்களின் தேவையை உணரும் ஈர நெஞ்சமே ஒரு நல்ல தலைவருக்கான முதல் தகுதியாகும்.
பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தன் சுயநலமற்ற நல்லெண்ணத்தால் ஏழை எளிய மக்களின் நாடித் துடிப்பை அறிந்தார். வயிற்றுக்குச் சோறிடாமல் கல்வி புகட்ட முடியாது என்பதை உணர்ந்து அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் மற்றும் கிராமங்கள் தோறும் திறக்கப்பட்ட பள்ளிகள் தமிழகத்தின் கல்வி வரலாற்றையே மாற்றி அமைத்தன.
அணைகள் பொதுத்துறை நிறுவனங்கள் எனத் தமிழகத்தின் தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் இன்று கல்வித் தந்தை என்று மக்களால் போற்றப்படுகிறார். பெரிய பட்டங்கள் பெற்றவர்கள் கூடச் செய்யத் தயங்கும் மக்கள் நலப் பணிகளை தன் நேர்மையாலும் நல்லெண்ணத்தாலும் சாதித்துக் காட்டினார். எனவே ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்களுக்குப் படிப்பு என்பது கூடுதல் தகுதியே தவிர அதுவே முதன்மையான தகுதியல்ல மக்களுக்கு நல்லது செய்யத் துடிக்கும் நல்மனமே முதற்படி என்பதை அவர் வாழ்ந்து காட்டினார்.
தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி இன்றும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி ஒளியாய் விளங்கும் படிக்காத மேதை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான இன்று ஜூலை 15 அவர் காட்டிய நேர்மை வழியில் பயணிக்க உறுதியேற்போம். கல்வித் தந்தையின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி நெஞ்சார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள்
STAR M.சுரேஷ் குமார்





