“மாற்றத்திற்கான அரசு எனக் கூறிவிட்டு நிதிநிலை அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை” – திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்

மாற்றத்திற்கான அரசு எனக் கூறிவிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சட்டமன்ற பட்ஜெட் விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளதாவது: “நானும் தேடிப் பார்க்கிறேன், இந்த பட்ஜெட்டில் புதிய நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. இது ஒரு கானல் நீர் போன்ற பட்ஜெட். திமுக அரசின் அனைத்துத் திட்டங்களையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு, எங்கள் திட்டங்களையே தொடர்ந்து செயல்படுத்தி வருகிறீர்கள். ‘மாற்றத்திற்கான அரசு’ என்று கூறிவிட்டு, திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றியிருப்பதுதான் தவெக அரசின் சாதனை.”

மார்க்கண்டேயன் பேசிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட சபாநாயகர், பொதுவெளியில் முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்தது அவையின் மாண்புக்குக் குந்தகம் விளைவிப்பதாக உள்ளதால், இது தொடர்பாக உரிமைக்குழுவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள தகவலைத் தெரிவித்தார்.

ஒரே விவகாரத்திற்கு இரண்டு தண்டனைகளா?

அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு: “அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்கூட்டங்களில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமானதுதான். அதுதொடர்பாகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தால், வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்று சட்டப்படி தீர்ப்பு வழங்கப்படும்.

அதேபோல், சட்டமன்றத்தில் பேசப்படும் கருத்துகள் குறித்து நடவடிக்கை எடுக்கச் சபாநாயகருக்கும் உரிமைக்குழுவிற்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், ஒரே விவகாரத்திற்கு இருவேறு தளங்களில் இரண்டு விதமான தண்டனைகளை வழங்குவது இதுவரை இல்லாத நடைமுறையாகும்” என்று குறிப்பிட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts