
கோயம்புத்தூர், ஆக. 9:
போதையில்லா கோவை என்ற சமூக நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் VGM காஸ்ட்ரோ, ஆர்த்தோ மற்றும் பல்துறை சிறப்பு மருத்துவமனை மற்றும் கோவை தடகளக் கழகம் இணைந்து நடத்திய ‘Run for Nation 2026’ விழிப்புணர்வு மாரத்தான், கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

VGM மருத்துவமனை மற்றும் கோவை தடகளக் கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இணைந்து இந்த மாரத்தானை நடத்தியது. கரூர் வைஸ்யா வங்கி முக்கிய ஆதரவாளராக இணைந்திருந்தது. இந்த ஆண்டைய மாரத்தானில் 4,750 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றதுடன், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் இணைந்து மொத்தம் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
‘Say No to Drugs’ மற்றும் ‘Save Your Knee’ என்ற இரட்டை நோக்கங்களுடன் நடைபெற்ற இந்த மாரத்தான், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வையும் முழங்கால் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா தலைமையில் 7,000-க்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத்குமார் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தார்.
பல்வேறு வயது மற்றும் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பதிவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்காக மாரத்தான் மூலம் திரட்டப்பட்ட நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
VGM மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், மருத்துவ இயக்குநர் டாக்டர் சுமன், கோவை தடகளக் கழக செயலாளர் திரு. சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.








