கோவையில் இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு!!

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 கோவையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு ஆர்ய வைசிய மகாசபை சார்பில் நீலம்பூர் பிஎஸ்ஜி மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் 12 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்றனர். நான்கு அறிவுசார் அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்கான கண்காட்சியும் இடம்பெற்றது.

தொழில்முனைவு, தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, நிதி, தலைமைத்துவம், புத்தாக்கம், அறிவியல், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிலரங்குகள் நடைபெற்றன.

மாநாட்டுக்கான கருத்து 120 நாள் விழிப்புணர்வுப் பயணத்தின் மூலம் உருவானதாக திட்டத் தலைவர் சுரபி கார்த்திக் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின்போது 40-க்கும் மேற்பட்ட நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று 4,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை நேரடியாகச் சந்தித்ததாக அவர் கூறினார்.

இதுகுறித்து சுரபி கார்த்திக் மேலும் கூறியதாவது,

இளைஞர்களிடம் திறமை, கல்வி மற்றும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதிலும், வழக்கமான வேலைவாய்ப்புகளுக்கு அப்பால் உள்ள வாய்ப்புகள் குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. வேலைவாய்ப்புகளைத் தேடுவதிலிருந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மனநிலைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றார்.

மாநாட்டையொட்டி பெரிய அளவிலான வர்த்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் தொழில் வாய்ப்புகள், தொழில் தீர்வுகள், சமூக முன்னெடுப்புகள், எதிர்காலத் தொழில்கள் மற்றும் அரசு சார்ந்த சேவைகள் மற்றும் ஆலோசனைகள் இடம்பெற்றன.

உலகம் முழுவதும் உள்ள ஆர்ய வைசிய சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் வகையில் விட்டோ (VITO) / வைசியா சூப்பர் ஆப் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts