
கோவை: மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாக நடிகர் சூரி கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மண்டாடி படக்குழுவினர் வருகை புரிந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி மண்டாடி படம் வெளியான பிறகு நமது தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று இந்த மீனவர்களின் வீர விளையாட்டான படகு சவாரி விளையாட்டிற்கும் அரசு உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புவதாகவும் முதல் முறையாக தனது படம் ஐ மேக்சில் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்த அவர் , மண்டாடி படம் தான் நடித்த விடுதலை படத்தைப் போலவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மன்றாடி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அமைவது தொடர்பாக படப்பிடிப்பின் போதே தான் கேள்வி எழுப்பியதாகவும் அப்போது கதைக்கு தேவை என்பதால் அது போன்ற காட்சிகள் இடம் பெற்றாலும் அதற்கு படத்தில் ஒரு மெசேஜ் கொடுத்துள்ளதாகவும் விளக்கமளித்தார் . நம் மண் சார்ந்த படத்தில் நடித்த தொட்டி தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தவர் பின்னர் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர் மேலும் அவர்களை உற்சாகப்படுத்த அவர்களுடன் நடனமாடினார். மேலும் வீர விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினர் ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்த அவர் கல்வியிலும் கவனம் தேவை என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.





