​பொள்ளாச்சியில் 20 ஆண்டுகள் பழமையான மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாகப் புகார்- சார் ஆட்சியரிடம் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை ஆதாரங்களுடன் மனு!!

கோவை மாவட்டம்
பொள்ளாச்சி வார்டு எண் 2 விகேவி லேஅவுட் மெயின் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி பூங்கா மற்றும் தண்ணீர் தொட்டி அருகே இருந்த 20 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் மற்றும் வாகை மரம் ஆகியவை சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்பட்டதாக இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா. வெற்றிவேல் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

​பொதுமக்கள் பயன்பாட்டுப் பகுதியில் வளர்ந்திருந்த இரு மரங்களும் வெட்டப்பட்டு அவசர அவசரமாக லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் அறக்கட்டளை சார்பில் சம்பவ இடத்தில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மரங்களின் அடிப்பகுதிகள் மற்றும் வெட்டப்பட்ட கிளைகள் பார்வையிடப்பட்டு புகைப்படங்கள் மற்றும் GPS அமைவிட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள ஆட்டோ கேரேஜ் உரிமையாளர்களான திருமதி நாகரத்தினம் மற்றும் திரு. முத்துகிருஷ்ணன் ஆகியோரே இம்மரங்களை வெட்டி விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே பொது இடத்தில் அமைந்திருந்த இம்மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதி பெறப்பட்டதா மற்றும் சட்டபூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்
கள ஆய்வில் திரட்டப்பட்ட புகைப்படங்கள் மற்றும் GPS அமைவிடச் சான்றுகளும் மனுவுடன் சார் ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts