தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கவும், டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருப்பினும், இந்தத் தடுப்புப் பணிகளுக்குப் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகக்கூடிய தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், குடங்கள் போன்றவற்றை உடனடியாக அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
காய்ச்சல், சளி போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால், மருந்தகங்களுக்குச் சென்று தாங்களாகவே மாத்திரைகளை சுயமாக வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல், சளி ,இருமல், உடல் சோர்வு போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள்,அரசு மருத்துவமனை அல்லது தகுதிவாய்ந்த மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு வரும் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு (Domestic Breeding Checkers) பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, அவர்கள் கொசுப்புழுக்களைக் கண்டறிந்து அழிக்க அனுமதிக்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் கொசுக்கள் உற்பத்தியாகக்கூடிய மூலங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.இது தொடர்பான “கொசு உற்பத்தியற்ற வளாகச் சான்று” (Mosquito Breeding Sources Free Campus Report) அறிக்கையை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாநகராட்சிக்குக் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், காய்ச்சல் , சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைபாடுகளால் பள்ளி/கல்லூரிகளுக்கு வராத மாணவர்களின் விவரங்கள் அடங்கிய தினசரி அறிக்கையையும் (Students Absent Report) மாநகராட்சிக்குத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
டெங்கு இல்லாத தூத்துக்குடி மாநகராட்சியை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் இந்நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
–பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts