அன்னூரில் 10,000 மரக்கன்றுகள் நடவு திட்டம் தொடக்கம்!

கோவை:

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் அன்னூரில் சிறுதுளி அமைப்பு மற்றும் ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தைத் தொடங்கின.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அன்னூர் பெரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த ஆண்டு 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக தற்போது மேலும் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை கோவை மண்டல இணை ஆணையர் பெ. ரமேஷ், ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுமீத் பங்கா, பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவுத் தலைவர் டாக்டர் லீனா தேஷ்பாண்டே, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதில் பங்களித்து வரும் அன்னூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து தன்னார்வலர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மேலும், உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளி, சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அன்னூர் பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் இளைய தலைமுறையினரிடையே இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts