
தூத்துக்குடி: வீடற்ற கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கு அரசு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகுபாடுகளைத் தடுக்கச் சட்டம்: சமூக, பண்பாட்டு, அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் கைம்பெண்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதைத் தடுக்க, சமத்துவம் மற்றும் பாகுபாடின்மையை உறுதிப்படுத்தும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், மேற்கண்ட கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கூடுதல் நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காந்திய கைம்பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பனிமலர் கைம்பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் திருமதி ஜி. கஸ்தூரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.




