
கந்தர்வகோட்டை அக் 23
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மன்றத்தின் சார்பில் சர்வதேச மோல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.சர்வதேச மோல் தினம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது
வேதியியலின் அடிப்படை அலகை அறிந்துகொள்வோம்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வேதியியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மோல் (Mole) என்ற அளவீட்டு அலகின் சிறப்பை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 23ஆம் தேதி சர்வதேச மோல் தினம் கொண்டாடப்படுகிறது.
வேதியியலில் அணுக்கள், மூலக்கூறுகள் மற்றும் பிற நுண்ணிய துகள்களின் எண்ணிக்கையை அளவிட மோல் என்ற அலகு பயன்படுகிறது. ஒரு மோல் என்பது துகள்களைக் குறிக்கிறது. இந்த எண்ணிக்கை அவகாட்ரோ எண் என அழைக்கப்படுகிறது.
அக்டோபர் 23ஆம் தேதி காலை 6.02 மணி முதல் மாலை 6.02 மணி வரையிலான நேரத்தைக் குறிக்கும் வகையில், 6:02 மற்றும் 10/23 என்ற எண்களின் 6.022 × 10²³ எண்ணிக்கையிலான அடிப்படையில் இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது வேதியியல் அறிவியலின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே எடுத்துரைக்கும் ஒரு சிறப்பான நாளாகும்.
மோல் என்ற கருத்து வேதியியல் கணக்கீடுகள், வேதிவினைகள், பொருள்களின் அளவீடுகள் மற்றும் ஆய்வகச் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தினத்தின் மூலம் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்த்தல், வேதியியல் பாடத்தின் அடிப்படைக் கருத்துகளை எளிமையாகப் புரியவைத்தல் மற்றும் அறிவியல் சிந்தனையை ஊக்குவித்தல் மற்றும் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்படுகிறது என்று பேசினார். முன்னதாக தொடக்கநிலை மாணவர்களுக்கு குழந்தை துளிர் இதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, மணிமேகலை, நிவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.




