
கோவை தி ரெசிடென்சி உணவகத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க்கும் விதமாக, கேக் மிக்சிங் செர்மோனி நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சுமார் 1000 கிலோ கேக் தயாரிப்பு பொருட்கள் மிக்சிங் செய்யபட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் உணவகத்தில், 2026ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாகத் வருடாந்திர கிறிஸ்துமஸ் பழ கேக் கலவை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கிறிஸ்மஸ் பழம் கேக்குகளுக்காக உணவகத்தின் சமையல் கலைஞர்கள், ஒன்றிணைந்து பழங்கள் பல்வேறு மதுபானங்கள் மற்றும் நறுமண மசாலா பொருட்கள் கலந்த பிரத்தியேக கிறிஸ்துமஸ் பல கேக் கலவையை உருவாக்கினர். இதில் பாதாம், வால்நட், கிரான்பெர்ரி, உலர் திராட்சை, அத்திப்பழம், கருப்பு திராட்சை, மற்றும் சர்க்கரையில் பதப்படுத்தப்பட்ட இஞ்சி, உள்ளிட்ட உயர்தர பழங்கள் என சுமார் 1000 கிலோ கிராம் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. சிறந்த தரமான மதுபானங்கள், டெமராரா சக்கரை, மற்றும் நறுமண மசாலா பொருட்களுடன் கலக்கப்பட்ட இந்த கலவை, அதன் தனித்துவ சுவையையும், நறுமணமும் மேம்படும் வகையில் பக்குவப்படுத்தப்பட்டது.
இந்த பாரம்பரிய கேக்கலவை விழாவில் உணவகத்திற்கு வருகை தந்த விருந்தினர்களும், ஹோட்டல் ஊழியர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பண்டிகை காலத்தின் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் கொண்டாடும் வகையில் இந்த திருவிழா நடைபெற்றது. கலக்க பட்ட இந்த கலவைகள் உரிய காலம் வரை பக்குவப்படுத்தப்பட்டு பின்னர் உணவகத்தின் பிரத்தியேக கிறிஸ்துமஸ் ப்ளம் கேக்குகளாக தயாரிக்கப்பட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரெசிடென்சி டவர்ஸ் உணவகத்தின் பொது மேலாளர் அமர்நாத் கூறியதாவது.. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேக்கலவை திருவிழா, கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும். எங்களது ஊழியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஒன்றிணைந்து கேக் தயாரிக்கும் கலையின் மூலம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கொண்டாடும் இந்த நிகழ்வை ஆண்டு தோறும் எதிர்பார்தது காத்திருப்பதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், இதனை தி ரெசிடென்ஸ் டவர்ஸ், தனது சிறப்பான கேக் வகைகள் மூலம் விருந்தினர்களுக்கு கிறிஸ்மஸின் அன்பையும், மகிழ்ச்சியும் வழங்க தயாராகி வருகின்றது. இந்த கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக உணவகத்தின், பிளம் கேக்குகள் இடம்பெற்றுள்ளதாக வும் இவை கிறிஸ்துமஸ் நாட்களில் விற்பனைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்க படும் என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.




