
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எல்.வி.புரம் கிராமத்தில் சுமார் 172 ஏக்கர் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது, இந்த கண்மாய்க்கு பொதுவாக விருதுநகர் மாவட்டத்தில் பெய்யும் மழையில் வரும் காற்றாற்று வெள்ளத்தின் காரணமாக இந்த கண்மாய் நிறைந்து,எல்.வி புரம் கிராமத்தில் உள்ள சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பதற்கு போதுமான குடிநீர்,காலம் காலமாக இந்த கண்மாயை நம்பியே இருந்து வந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கண்மாயை நம்பி சின்னவெங்காயம், மிளகாய்,சோளம்,கம்பரிசி,உளுந்து,பாசி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்திருந்தனர், இந்தக்கண்மாயில் உள்ள மதகுகள் பழுக்கடைந்து இருந்தாலும், கண்மாயின் கரைகள் பலப்படுத்தாமல் இருந்ததாலும், அதேபோல் தடுப்பணைகளும் மிகவும் சேதமஅடைந்திருந்ததால், இந்தப்பொதுப்பணித்துறை கண்மாயை சீரமைக்க வேண்டும் என்று அக்கிரம மக்கள் கடந்த திமுக அரசிடம் கோரிக்கை வைத்தனர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2025-ம் ஆண்டு பணிகள் நடைபெற்று வந்தன, இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த ஒப்பந்ததாரர், பணிகளை முழுமையாக முடிக்காமல் வைத்திருந்த காரணத்தினால், தற்போது விருதுநகர்,தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக காற்றாற்று வெள்ளம் மூலமாக 172 ஏக்கர் பரப்பளவில் இருந்த கண்மாய்க்கு வந்த தண்ணீர், அந்தக்கண்மாய் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு, இந்த கண்மாய்த் தண்ணீரை வைத்து சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ள இருந்த விவசாயிகளுக்கு கரையை உடைத்து தண்ணீர் வெளியேறியதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து எல்.வி.புரம் கிராமத்திற்கு சென்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், கண்மாயில் உடைப்பு ஏற்பட்டகண்மாயையும் நீர்வரத்து ஓடைகளையும் விவசாய நிலங்களையும் ஆய்வு செய்தார், அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன், கடந்த செப்டம்பர் 12-ம் தேதி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது, அந்தக்கூட்டத்திற்கு வைப்பார் வடிநில கோட்டப் பொறியாளர், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் உள்ளிட்ட எந்த அரசு அதிகாரிகளும் வரவில்லை, அந்த கூட்டத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் இந்த கூட்டத்திற்கு யாரும் வரவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தேன், எந்த அதிகாரிகளும் வராமல் இந்த கூட்டத்தை எப்படி நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினேன், அதேபோன்று அக்டோபர் மாதம் 16-ம் தேதி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளையும் வைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினேன், விளாத்திகுளம் பகுதியில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் பொதுப்பணித்துறை கண்மாய்களில் உள்ள மதகுகளின் சாவிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
அதேபோல் எல்.வி.புரம் கிராமத்தில் சுமார் 172 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறை கண்மாய் உள்ளது, இந்த கண்மாய்க்கு 2025-ம் ஆண்டு ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டு கடந்தாண்டு கோடையில் பணியை செய்ய முழுமையான காலம் இருந்தும் அந்தப்பணியை முழுமையாக மேற்கொள்ளவில்லை, அந்தப்பணி நடக்கிறது நடக்கிறது என்று கூறிவந்தனர்,ஆனால் தற்போது கண்மாய் கரை மற்றும் மதுகுகள் உடைக்கப்பட்டு அனைத்து தண்ணிகளும் ஒரு சொட்டு கூட இல்லாமல் கண்மாயிலிருந்து வெளியே சென்று விட்டது, அதேபோல் பல ஏக்கரில் தற்போது விவசாயம் செய்துள்ள மிளகாய்,வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அளிக்கப்பட்டுள்ளது, இப்பணியை திட்டமிட்டு வைப்பார் வடிநில கோட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்றும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தெரிவித்தார்.
இந்தத் துறையினுடைய அமைச்சர் ஏற்கனவே தூங்கிக் கொண்டிருக்கிறார், எந்தப் பணியையும் செய்யவில்லை, வாய்ப்பு இருந்தும் எந்தவித சேதாரமும் இல்லாமல் காப்பாற்ற வேண்டிய குளங்களை எல்லாம், இவர்களின் அஜாக்கிரதையால் உடைத்து தண்ணீர் வீணாகி போகிறது , தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் கூட்டத்தைக் கூட்டி இருந்தார், ஆனால் அங்கு எந்த தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் யாரும் வராததால், கூட்டம் நடைபெறாமல் போனது, இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மன்னிப்பு கேட்டார்.
அதேபோல் அரசு அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியர்களையும் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை என்றும், இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது, மாவட்ட நிர்வாகமும் தூங்கிக் கொண்டுள்ளது, என்ன செயல்பாடுகளை இவர்கள் செய்யப் போகிறார்கள் என்ற வினா? எழுப்பப்படுகிறது, எனவே இந்த தமிழக அரசுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.




