கோவையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம்!!
. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். அவர்கள் அனுப்பிய தபாலில் கூறியிருப்பதாவது: – தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நவீன வளர்ச்சியின் மூலமாக ஆன்லைன் ரம்மி மற்றும் அது தொடர்பான சூதாட்ட விளையாட்டுகள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் முழு கவனத்தையும் இழந்து பணம், நகை, சொத்துக்கள் ஆகியவற்றை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவை தேடி கொள்கின்றனர்.
இந்த விளையாட்டுகள் தொடர்ந்து நீடித்தால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும். தமிழகத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட தற்கொலைகள் இந்த காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான விவாதத்தையும், ஆன்லைன் ரம்மி குறித்தான ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 71 பக்க அறிக்கையை பெற்று தமிழக சட்டமன்றத்தில் அக்டோபர் மாதம் ஆன்லைன் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தற்போது வரை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், அது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக கவர்னர் ஆர். என். ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற ஆன்லைன் ரம்மி தற்கொலைகளுக்கு கவர்னர் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு கவர்னர் சொந்த பணத்தில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த தபாலில் கூறப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தபால் அனுப்பினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.