கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி கிளப் கோயமுத்தூர் சார்பாக கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது..
ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் அமைப்பின் சஞ்சீவனி எனும் திட்டத்தின் வாயிலாக மருத்துவம் சார்ந்த பல்வேறு சமூக நலப்பணிகளை ரோட்டரி கிளப் கோயமுத்தூர் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த கொரோனா கால பரவலின் போது, சஞ்சீவனி என்ற திட்டத்தின் கீழ்,மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு,
பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பெறப்பட்ட ரூபாய் 10 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உருவாக்கும் ஆலைகள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினர். மேலும் ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவுவதற்கு 600 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், நீர் சுத்திகரிப்பான்கள் ஜெனரேட்டர்கள், பிபிஇ கருவிகள், ஓசோன் சுத்திகரிப்பு கருவிகளும் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன.
ரோட்டரியின் , “சுயத்திற்கு மேலான சேவை” என்ற வாசகத்தின்படி, இஎஸ்ஐ மற்றும் ஜிஹெச் டீன்களுடன் சேர்ந்து சமூகத்திற்கு தன்னலமின்றி பல மாதங்களாக உறக்கமில்லாமல் உழைத்து உயிர்களைக் காப்பாற்றிய ரொட்டோரியன்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவை பணிகளை நினைவு கூறும் விதமாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாகத்தில் ஐந்து இலட்சம் செலவில் புதிய வாயில் கட்டிடம் அமைக்கப்பட்டது.
ரோட்டரி கிளப் கோயமுத்தூர் சார்பாக கட்டப்பட்ட இந்த புதிய கட்டிட திறப்பு விழாவில்,ரோட்டரி 3201, மாவட்ட ஆளுநர்,ராஜ்மோகன் நாயர் மற்றும் முன்னால் ஆளுநர் ஜோஸ் எம் சாக்கோ,இ.எஸ்.ஐ. டீன் டாக்டர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.. இந்நிகழ்ச்சியில்,இ.எஸ்.ஐ.மருத்துவமனை கண்காணிப்பாளர் , டாக்டர் ரவிக்குமார், ரோட்டரி மாவட்ட இயக்குநர் மாருதி உட்பட பலர் கலந்து கொண்டனர்…
– சீனி,போத்தனூர்.