ஜே.எம்.ஜே.ஹவுசிங் நிறுவனம் கோவை தடாகம் சாலையில் புதிய வீட்டுமனைகள் விற்பனையை துவக்கம்!!
வீட்டுமனை மற்றும் வில்லா வீடுகள் விற்பனையில் முன்னனி நிறுவனமான ஜே.எம்.ஜே.ஹவுசிங் நிறுவனம் கோவை தடாகம் சாலையில் ஜாய் பாரடைஸ் எனும் புதிய வீட்டுமனைகள் விற்பனையை துவக்கியது.
கோவையில் காலி வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் கட்டி தருவது,லக்சுரி வில்லாக்கள் விற்பனை செய்வது என வீட்டுமனை தொடர்பான துறையில் முன்னனி நிறுவனமாக ஜே.எம்.ஜே.ஹவுசிங் நிறுவனம் உள்ளது. இந்நிலையில் கோவை தடாகம் சாலை பிரதான சாலையோரத்திலேயே தனது புதிய ஜாய் பாரடைஸ் எனும் புதிய வீட்டு மனைகளுக்கான விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்சன் பி.தாமஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும்,பின்னனி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார்.விழாவில்,பல்வேறு அமைப்பு,மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் என முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்..தடாகம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஜாய் பாரடைஸ் வீட்டு மனைகள் விற்பனை ,முன் பதிவுகள் துவங்கின, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா நம்பீசன் அவர் பாடிய பைவ்,பைவ் என்ற பாடலை மேடையில் பாடி அசத்தினார்.
-சீனி போத்தனூர்.