கோவையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் கல்வி உதவிக்கு நிதி திரட்டும் வகையில்,ரெட் ஃபீனிக்ஸ் அறக்கட்டளை மற்றும் ஹோப் அமைப்பினர் ஆகியோர் சார்பாக ,ஒரு நாள் பொழுது போக்கு உணவு திருவிழா மற்றும் விற்பனை கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள, அலெக்ஸாண்டர் குதிரையேற்ற பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.ஃபீனிக்ஸ் ஃபெஸ்ட் என்ற தலைப்பில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், கோவை மாநகர வடக்கு காவல்துறை துணை ஆணையர் சந்தீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்..ரெட் ஃபீனிக்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர்கள் புவனா சதீஷ்,வினோனா சதீஷ் மற்றும் ஹோப் அமைப்பின் தலைவர்கள் நமன் மோமயா,பார்த் சுகாதியா ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,உணவு வகைகள் என நாற்பதுக்கும் மேற்பட்டஅரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொழுது போக்கு அம்சங்களாக, காஸ்ப்ளே, அனிம், இ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜூம்பா போன்ற பல்வேறு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.குறிப்பாக இங்கு வரும் பொதுமக்களை மகிழ்விப்பதற்காக பிரபல சின்னத்திரை பிரபலங்கள்,யூ டியூப்பர்ஸ் என பலர் கலந்து கொண்டனர்.. சிறப்பு விருந்தினர்களில் குக் வித் கோமாளி புகழ், எருமா சானியின் ஹரிஜா, ஹுசைன் அகமது, வி.ஜே.கல்யாணி திவ்யானந்த் மற்றும் ஃபயாஸ் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.. பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே புதிய அனுபவத்தை தரும் வகையில் இளம் தலைமுறையினர் முதன் முறையாக ஒருங்கிணைத்துள்ள இந்த ஒரு நாள் திருவிழாவில், ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.