ஒட்டப்பிடாரம் அருகே நடுவக்குறிச்சி கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல். ரமேஷ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். மற்றும் கனமழையால் சேதமடைந்த வீடுகளையும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில், ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி நல்லதம்பி
மற்றும் ஊர் இளைஞர்கள் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.