ஆன்லைன் ஆப் மூலம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கான நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகப்படியான லாபம் கிடைக்கும் என நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து இவிகோ என்ற ஆப் பதிவிறக்கம் செய்தோம். அந்த ஆப்பில் ரூ. 650 முதலீடு செய்தால், 37 நாட்களுக்கு நாள்தோறும் வட்டியாக ரூ. 35 கிடைக்கும் என்றும், 37 நாட்கள் முடிவில் ரூ. 650 பணம் திரும்ப கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் முதலீடு செய்த பலர் அதில் கூறியப்படி நாள்தோறும் பணம் கிடைப்பதாக தெரிவித்தனர். இதுதவிர ஸ்மார்ட் சிட் பண்ட் என்ற திட்டத்தின் மூலம் ரூ. 28, 200 ஆயிரம் முதலீடு செய்தால், 7 நாட்களில் வட்டியுடன் சேர்த்து ரூ. 62, 400, மற்றொரு திட்டத்தில் ரூ. 58, 400 முதலீடு செய்தால், 7 நாட்களில் ரூ. 1. 23 லட்சம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பி நாங்கள் அந்த ஆப்பில் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்தோம்.
இந்நிலையில் கடந்த, 7-ம் தேதி முதல் எங்களுக்கான பணம் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அந்த ஆப்பில் உள்ள வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது, வங்கிகளுடன் பேசி வருவதாகவும், சில நாட்களுக்கு பின் முதலீடு பணத்தை எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் மோசடி ஆப் மூலம் பணத்தைக் கட்டி ஏமாந்தவர்களின் புகார் ஆகும் மக்கள் தொடர்ந்து ஏமாறுவதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது போலீசார் விழிப்புணர்வு நோட்டீசை கல்லுாரிகள், பள்ளிகள், ஐ. டி. , நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வழங்கி சைபர் கிரைம் மோசடிகளை விளக்கி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போலீசார் வழங்கி வரும் நோட்டீசில் கூறியிருப்பது: தெரியாத நபர்கள் டெலிகிராம், வாட்ஸ் அப், பேஸ் புக், வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டால் பதில் அளிக்காதீர்கள், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். பகுதி நேர வேலை வாய்ப்பு, யூடியூப் லைக், ரேட்டிங், டாஸ்க் ஆகியவற்றில் லாபம் தருவதாக பணம் கட்ட சொன்னால், கட்டாதீர்கள். அதிக லாபம், வீட்டிலிருந்தே வேலை எனக் கூறி, ஆன்லைனில் முதலீடு செய்ய சொன்னால், செய்யாதீர்கள். வங்கி கே. ஓய். சி. , அப் டேட், மின் கட்டணம், ஆதார் இணைப்பு என வரும் லிங்கை தொடதீர்கள், நம்பாதீர்கள், உங்கள் பணம் திருடப்படும். பணம் இழந்தால், உடனே அழைக்க வேண்டிய இலவச எண் 1930, சைபர் கிரைம் புகாரை பதிவு செய்ய இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.