கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரளாவில் கேரளா அரசால் துவங்கப்பட்ட வித்யா வாகினி திட்டம் மலைவாழ் மக்களுக்கும் மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதியில் படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்ய அரசு உத்தரவிட்டது அதன் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள பஞ்சாயத்து சார்பில் வாகனங்கள் பள்ளி மாணவர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பித்த முதல் நான்கு மாதத்திற்கு அதற்கான தொகையை செலுத்தி பின்னர் ஒரு வருடமாக நிலுவைத் தொகை செலுத்தாத நிலையில் வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வாகனங்களை பழுது பார்ப்பதற்கான எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருப்பதாகவும் பஞ்சாயத்தில் சென்று விசாரித்த பொழுது கேரளா அரசு இதற்கென்று நிர்வகிக்கப்பட்ட தொகை வராததால் தற்போது செலுத்த முடியவில்லை மீண்டும் தொடர அறிவுறுத்துள்ளனர். திங்கட்கிழமை முதல் வாகன ஓட்டிகள் இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் வாகனங்களை இயக்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர் .
எனவே அரசு உடனடியாக அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிகுவைத் தொகையை கொடுத்து சரி செய்து இந்த திட்டத்தை தொடர முயற்சி செய்ய வேண்டும் என மலைவாழ் மக்கள் மற்றும் கிராம பகுதிகளில் மக்களின் எதிர்பார்ப்புகள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.