தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் காசிலிங்கபுரம் கிராமத்தில் அரசு பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் விழா ஊர் நாட்டாமை குபேந்திரன் பாண்டியன் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் நடைபெற்றது. முதலில் சுந்தரலிங்கம் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர்
மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது , தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் ரூ.1 லட்சம் பணம் மற்றும் 2 ஸ்மார்ட் டிவியும் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
எம்எல்ஏ சண்முகையா பேசியது:
புதுமைப்பெண் திட்டம் காலை சிற்றுண்டி திட்டம் என கல்விக் திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பர்னிச்சர் பார்க் மற்றும் பேட்டரியில் இயங்கும் கார் தொழிற்சாலை என வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியாக இப்போது ரூ.2 லட்சம் அமைச்சர் வழங்கியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியது:
இங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சி என்னை கவர்ந்தது , கல்வி செல்வம் தான் அழிக்க முடியாத செல்வம் நானும் பத்தாவது வகுப்பு வரையில் படித்துள்ளேன் 11,12 வகுப்பு தரம் உயர்த்த கோரிக்கை வைக்கிறீர்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் ,
தாய் தந்தையர்கள் ஆசிரியர்கள் அறிவுரையை கேட்டு நல்ல வழியில் கல்வியில் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ஒரு அரசு பள்ளிகளில் படித்தவர் தான் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் உபரிசங்கர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி ராமசாமி பில்லா ஜெகன் மாவட்ட பிரதிநிதிகள் கனி ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜா மாரியப்பன் மாவட்ட மகளிர் அணி தமிழ்ச்செல்வி காசிலிங்கபுரம்
ஊர் நாட்டாமை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவிகள் கிளை செயலாளர் பெரியதுரை உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் முனியசாமி