கோவை மாவட்டம் பொள்ளாச்சி இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை மற்றும் பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் இணைந்து இயற்கை குறித்த விழிப்புணர்வுக்காக காடுகளை காப்போம், காட்டுயிர்களை பாதுகாப்போம் என்ற பதாகைகளோடு இருசக்கர வாகனப் பயணம் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சி 17/02/2024 காலை 5.30 மணிக்கு துவங்கும் வாகனப் பயணத்தை பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பொள்ளாச்சியில் துவங்கி உடுமலை, மூணாறு, குமுளி வழியாக கவி வனம் சென்று திரும்பும் இந்த பயணத்தில் (சுமார் 250+250 கிமீ) 50 க்கும் மேற்பட்ட பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ம.கமலக்கண்ணன், பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் நிர்வாகி செல்வமணிகண்டன் மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.