கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு மண்ணில் பிறந்து மூணாறு மண்ணில் படித்து மூணாறுக்கு பெருமை சேர்க்கும் விதமாக எளிய சகாப்தத்திற்கு பாராட்டு விழா மூணாறு பஞ்சாயத்து ஹாலில் நடைபெற்றது. மலையாளி ஒரு ஜனிதகவாயன என ஒரு புத்தகத்தை எழுதிய திரு சேதுராமன் ஐ.பி.எஸ் (IGP NORTH ZONE) அவர்களுக்கு கே. டி.எச். வளர்ச்சி மையம் தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ அட்வகேட் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே மணி, திருவனந்தபுரம் தமிழ் துறை ஆசிரியர் டாக்டர் ஜெயகிருஷ்ணன், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
சேதுராமன் ஐ.பி.எஸ் (IGP NORTH ZONE) இவர் மூணாறு மண்ணில் தமிழ் கல்வி படித்து தமிழ் தான் தன் சொந்த மொழி என்றாலும் கேரளத்தில் உள்ள மலையாளம் மொழியை கற்று “மலையாளி ஒரு ஜனிதக வாயன” என்ற தலைப்பில் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். இந்தப் புத்தகத்தின் பலனாக கேரளத்தின் 2022 ம் ஆண்டின் இலக்கியத்திற்கான கேரள அரசு வழங்கும் மிக உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
இந்த விருதினை பாராட்டும் விதமாக கே.டி. ஹெச் வளர்ச்சி மையம் தலைமையில் நேற்றைய தினம் திரு: சேதுராமன் ஐ.பி.எஸ் (IGP NORTH ZONE)அவர்களை பாராட்டும் விதமாக மூணாறு பஞ்சாயத்து ஹாலில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டும் விதமாக பரிசுகள் வழங்கி அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்,சிறிய குழந்தைகள் கவிதைகள் மூலம் வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தினர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.