தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஈரால் சர்வீஸ் ரோட்டில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த AP39 M1119 என்ற வெளி மாநில வாகனப் பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் 40 ஆயிரம் லிட்டர் பயோடீசல் ஆந்திர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைடுத்து உடனடியாக போலீசார் பயோடீசல் கடத்தி வந்த டேங்கர் லாரியை பறிமுதல் செய்ததோடு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரான உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் கபூர் மகன் ராம் பகதூர் (39) என்பவரையும், மற்றொரு டிரைவரான எட்டையபுரம்: வடக்கு செமபுதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் அய்யனார் ஆக இருவரையும் கைது செய்து எட்டையபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.