தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் முன்னாள் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மனும், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான காந்தி என்ற காமாட்சி தலைமையில் பசுவந்தனையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் , ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்ப கட்டத்தில் கிளைச் செயலாளராக இருந்து அதிமுகவில் பொதுச் செயலாளராகவும் முதலமைச்சராகவும் வர முடியும் என்ற வரலாற்றை படைத்தவர் அண்ணன் எடப்பாடி யார் அவர்கள். இந்திய துணை கண்டத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பிடித்து 2.25 கோடி உறுப்பினர்களை அதிமுக பெற்று இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நாம் ஆளுகின்ற பொறுப்பில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் பொறுப்பில் இருந்தாலும் சரி மக்கள் மன்றத்தில் நம்பர் ஒன் இயக்கம் அதிமுக என்ற நிலையை நீங்கள் உருவாக்கித் தந்திருக்கிறீர்கள்.
உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தற்போது மக்கள் மன்றத்தில் இந்த விடியல் ஆட்சி மக்களை நல்லது அல்லல்படுத்தி துன்பப்படுத்தி கொண்டிருக்கிறது இந்த ஆட்சி என்றைக்கு வீட்டிற்கு போகும் அன்றைக்கு தான் நமக்கு விடிவு காலம் என்ற மனநிலை மக்களிடம் இருக்கிறது. இந்த ஆட்சியின் அவல நிலையை மக்களிடம் கொண்டு சேர்த்து சேர்க்க வேண்டும். அப்போது இந்த மக்கள் தங்க தாம்பூலத்தில் ஆட்சியை நம்மிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறார்கள். அதிமுக கட்சி தொடங்கி 53 ஆண்டுகளில் 33 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம் அதிமுக.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுட்டெரிகின்ற சூரியன் இன்று மக்களை வாட்டி வதைக்கிறது.உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு மக்களை சுட்டெரிக்கும் சூரியனாக இந்த ஆட்சி வாட்டி வதைக்கிறது என்ற நிலையில் தமிழகத்தில் அரசியல் நிலைமை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விண்ணை முட்டுகின்ற அளவில் விலைவாசி உயர்வு பாலியல் வன்கொடுமை போதை பொருள் நடமாட்டங்கள் அதிகரிப்பு. கடந்த மூன்று ஆண்டுகளில் 300 கள்ளச்சாராய உயிரிழப்புகள். நீட் முடிவு தேர்வு ரத்து செய்வோம் என கூறி மாணவச் செல்வங்களை ஏமாற்றி விட்டார்கள். கல்வி கடன்களை தள்ளுபடி செய்வோம் எனக் கூறி மாணவர்களின் பெற்றவர்களை ஏமாற்றி விட்டனர் .
100 நாள் வேலையை 150 நாட்களாக தருவோம் எனக்கூறி வேலையை சரியாக கொடுக்காமல் சாதாரண தொழிலாளர்களை ஏமாற்றி விட்டார்கள். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனக்கூறி அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து தாய்மார்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் முப்பது மாதங்கள் கழித்து தகுதியுள்ள தாய்மார்களுக்கு மட்டும் கொடுக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு சாதகமான தேர்தல், திமுகவிற்கு பாதகமான தேர்தல் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உழைப்பால் பதவி பெறுகின்ற இயக்கம் அதிமுக. பிறப்பால் பதவி பெறுகின்ற இயக்கம் திமுக. கலைஞரின் மகனாக பிறந்ததினால் ஸ்டாலின் முதலமைச்சர், ஸ்டாலினுக்கு மகனாக இருந்ததினால் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி. உதயநிதிக்கு பிறகு யாரும் வரப்போவது கிடையாது திமுகவின் மூத்த அமைச்சர்கள் நொந்து நூலாகி வெளியில் சொல்ல முடியாமல் வேதனையில் மூழ்கி கிடக்கிறார்கள் பிறப்பால் பதவி கிடைக்கின்ற இயக்கம் திமுக, உழைப்பால் பதவி கிடைக்கின்ற அதிமுக வில் இருப்பதை நாம் பெருமை என்ற வகையில் நாம் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என பேசினார் .
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசுகையில், அண்ணா திமுக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால் திமுக ஒருமுறை ஆட்சியைப் பிடித்தால் மறுமுறை ஆட்சியை பிடித்த வரலாறு கிடையாது. மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மூன்று முறை ஆட்சியைப் பிடித்தார். கூட்டணி இல்லாமல் திமுக என்றாவது வென்றிருக்கிறதா, கூட்டணி இல்லாமல் ஆட்சியைப் பிடித்த ஒரே இயக்கம் அதிமுக.
கருணாநிதி காலத்தில் இருந்து தொடங்கி சாதிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பல்வேறு கட்சிகளுடன் தனக்கு முரணான எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு எமர்ஜென்சி காலத்தில் கடுமையாக எதிர்த்த இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கும் கட்சி தான் திமுக. ஆனால் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தனித்து நின்ற ஒரே இயக்கம் அதிமுக. அமமுக கட்சி தொடங்கியுடன் சொன்னேன்.அமமுக ஒரு கறிக்கோழி, முட்டை போடாது தின்னு கொழு கொழு என வளருமே தவிர குஞ்சு பொரிக்காது என சொன்னதற்கு என்னிடம் போன் செய்து கொலை செய்து விடுவேன் குத்தி விடுவேன் என மிரட்டினார்கள். உள்ளூர் ஜமீன்தாரை நம்பி இங்க வந்தாரு மூட்டையோடு வெளியூருக்கு போய் விட்டார்.
ஆன்லைனில் முடிக்க வேண்டிய வேலையை அமெரிக்காவில் போய் முடித்தவர்கள் நம்ம மக்கள்தான். சிகாகோவில் போய் சைக்கிள் ஓட்டி பழகுகிறார் இங்கே எல்லாம் வாய்ப்பில்லையா வீடுகளில் மூன்று மீட்டர் இருக்கும் இடங்களில் ஒரு மீட்டராக மாற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள் மூன்றுமே தனித்தனி குடும்பம் ஒரே நபர் 3 மீட்டர்கள் வைத்திருந்தால் தவறு மூன்று பேரும் தனித்தனி மீட்டர் தானே வைத்திருக்கிறார்கள் ஏன் ஒரே மீட்டராக மாற்ற வேண்டும் அப்போது உங்கள் அப்பா மட்டும் மூன்று கனெக்சன் வைத்திருந்தாரே முதலமைச்சர் அவர்களை என கேட்டேன். அதற்கு என் மேல் வழக்கு பதிவு செய்து செய்தனர் நீதிமன்றமானது விசாரணை மேற்கொண்டு வழக்கை தள்ளுபடி செய்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் மூன்று தொகுதிகளிலும் இரட்டை இலை வெற்றி என்ற நிலையை உருவாக்க வேண்டும் என பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஐயப்பன், நகரச் செயலாளர்கள் முருகன், சுப்பையா புலவர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாபு, மீனாட்சிபுரம் கிளைக் கழக செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தேவேந்திரன், மாவட்ட கழக அவைத்தலைவர் பெருமாள், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சுவிதா, சண்முகத்தாய் மேகலிங்கம், ஜெப கனி அரிச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர்கள் பிரியா செல்வகுமார், மாரியப்பன், சரஸ்வதி கிருஷ்ணசாமி, முருகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ்.நிகில், ஓட்டபிடாரம்.