
தூத்துக்குடி:அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்ட மக்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எதிர்காலத் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் – பலமுறை அளித்தும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி விஸ்வநாத தாஸ் நகர் இந்த நகரில் எதிர்கால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருவதாகவும், இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்றும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வருவதால் அதற்கு அடுத்துள்ள பகுதி மக்கள் வர முடியாத சூழ்நிலை ஏற்படும், தற்போது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவில்பட்டி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் நிஷாந்தனிடம் தங்களது கோரிக்கை மனுவையும் வழங்கினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.











