
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா அருகாமையில் நகராட்சி கால்பந்து மைதானம் அருகில் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் அவர்கள் வீட்டின் மேலே மின் கம்பி பல நாட்களாக மிகவும் தாழ்வான நிலைமையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த மின் கம்பியையும் கம்பத்தையும் சிறிது தூரம் மட்டும் மாற்றி அமைக்க
அவர்கள் பலமுறை வால்பாறை மின்வாரிய அதிகாரியிடமும் ஊழியர்களிடமும் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரை அடி உயரத்தில் உள்ள இந்த மின் கம்பி வழியாக சிங்கவால் குரங்குகள் வருகின்றது. காற்றடித்தால் கம்பி தரையில் உரசிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைக் கண்டும் காணாமல் மின் பணியாளர்கள் செல்கின்றனர். வீட்டின் மேலே இருக்கும் தம்பியை மட்டும் அகற்றி தருமாறு வீட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.










