சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் 310 வது பிறந்த நாள் விழா – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்பு!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் 310 வது பிறந்த நாளை முன்னிட்டு மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பூலித்தேவர் திருருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கப் பெற்றது மகிழ்ச்சி என்றும், அதிமுக ஆட்சியில் தான் நெற்க்கட்டும் செவலில் ரூ.50 லட்ச மதிப்பீட்டில் பூலித்தேவர் வாழ்ந்த அரண்மனை சீரமைக்கப்பட்டது என்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கருத்த பாண்டியன், இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலச் செயலாளர் தமிழரசன், திருவள்ளுவர் மன்ற செயலாளர் சீனிவாசன், அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், அதிமுக நிர்வாகிகள் ராமர், போடுசாமி, பகத்சிங் ரத்ததான கழக நிறுவனர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளருமான செல்லத்துரை என்ற செல்வம் செய்திருந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts