சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளை ஒட்டி திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் Dr.S.குருராஜ் மரியாதை..!!

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது புகழை போற்றியும் வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி கயத்தாறில் அமைந்துள்ள நினைவிடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் Dr.S.குருராஜ் மாலை அணிவித்து, உருவப்படத்துக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் குருராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

1799-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி மேஜர் ஜான் பானர்மேன் தலைமையில் விசாரணை நடைபெற்று, கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
ஆங்கிலேயருடனான போரில் வீரமரணத்தை தழுவிய பாளையக்கார மன்னன் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 226-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது.

பாஞ்சாலங்குறிச்சி போர் குறித்து ஆங்கிலேயர்கள் எழுதிய குறிப்புகள் கட்டபொம்மனின் வீரத்தையும், தியாகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
ஆங்கிலேயருக்கு எதிராக, கட்டபொம்மன் கொண்டு வந்த பொருளாதாரத் தடையே, இந்திய சுதந்திரப் போருக்கு அச்சாணியாக இருந்துள்ளது.

” தூக்கு மேடையில் நின்ற போதும் தன் தாய்மண்ணைக் காக்கவே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி கம்பீரமாக முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் ” என்றார்.

நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, புதூர் ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
மேலும், ராஜாபுதுக்குடியைச் சேர்ந்த பால்ராஜ்,சதீஷ்குமார், மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts