
பொள்ளாச்சி ஆனைமலை திவான்சாபுதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கணபதிபாளையம் அடுத்த களத்துப்புதூர் கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி தமிழக அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதிக்கு எவ்வித பேருந்து வசதியும் இல்லாததால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசர தேவைகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்ல சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டுப் பகுதியாக இருப்பதால் போதிய பாதுகாப்பு வசதிகளும் இல்லை எனக் கூறும் பொதுமக்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்.








