ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தினம் கொண்டாட பட்டது.

கோவை பங்கஜா மில் சாலையில் உள்ள ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தினம் கொண்டாட பட்டது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் அன்பை பகிர்ந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம்!!! மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழகத்தில் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கோவை ஜெம் மருத்துவமனையின், புற்று நோய் சிகிச்சை மையம், பல நூற்றுக்கணக்கான புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி புற்றுநோயால் பாதிக்க பட்ட நோயாளிகளுக்கு அன்பையும், ஆதரவையும் காட்ட வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி, இச்சமூதாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த நாளை ரோஸ் தினமாக கொண்டாட பட்டு வருகின்றது. ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் சார்பாக ரோஸ் தின நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய் சிகிச்சை முடிந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வை ஜெயா பழனிவேலு, மற்றும் பிரபா பிரவீன் ராஜ், ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குனர் டாக்டர் பரத் ரங்கராஜன் வரவேற்புரையாற்றினார். ஜெம் மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள அதிநவீன சிகிச்சை வசதிகள் பற்றி எடுத்துரைத்தார். ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் பழனிவேலு அனைவரது மத்தியிலும் தன்னம்பிக்கை உறையாற்றினார் அப்பொழுது அவர் கூறியதாவது.

கடந்த 50 ஆண்டுகளாக புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனது பயணத்தை எடுத்துரைத்தார். மேலும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை துறையை தேர்வு செய்ய தனது உத்வேகம் அளித்த நிகழ்வுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை சிங்காநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் ஸ்ரீகிரி பிரசாத், கலந்து கொண்டு புற்று நோய் சிகிச்சை முடித்தவர்களுக்கும், அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் தனது உரை மூலமாக ஊக்கமளித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா நோயாளிகள், ஊக்கமடையும் வகையிலும், மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களும் ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பெண்களுக்கான இலவச மாமோகிராம் திட்டத்தை துவக்கி வைத்தார் இறுதியாக அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சிவக்குமார் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts