பொள்ளாச்சி எம்.பி-க்கு சி.ஐ.டி.யு கோரிக்கை வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பி.எஃப். சிரமங்களுக்குத் தீர்வு காணக் கோரி மனு!!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பலன்களைப் பெறுவதில் பல ஆண்டுகளாக கடும் சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறி சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்கம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிக்குச் சேர்ந்தபோது பிறந்த தேதி மற்றும் பெயரைக் குறித்து எந்தவிதமான ஆவணங்களும் பெறப்படவில்லை. வாய்மொழித் தகவலின் அடிப்படையிலும் தோட்ட நிர்வாக அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்பவும் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. தற்போது தொழிலாளர்கள் ஓய்வு பெற்று அல்லது பணி முடித்து பி.எஃப். பணப் பலன்களைப் பெற முயலும்போது இந்த முரண்பாடுகளால் சிக்கல் ஏற்படுகிறது.

குறிப்பாக ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியும் நிர்வாகப் பதிவேடுகளில் உள்ள தேதியும், பெயரும் ஒன்றாக இல்லாததால் பணப் பலன்களைப் பெறுவதில் பெரிய காலதாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக விசாரித்தபோது நாங்கள் கோவை பி.எஃப். அலுவலகத்திற்குச் சென்றால் இங்கு எல்லாம் சரியாக இருக்கிறது எஸ்டேட் நிர்வாகத்திடம் சரிசெய்து வாருங்கள் என்கிறார்கள். எஸ்டேட் நிர்வாகத்திடம் சென்றால் பி.எஃப். அலுவலகத்தில்தான் தவறு இருக்கிறது என்று கூறி அலைக்கழிக்கின்றனர். இதனால், எங்களால் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

கடும் மழை, அட்டைக் கடி, மேடு பள்ளம் எனப் பாராமல் உழைக்கும் இந்த அப்பாவித் தொழிலாளர்கள் பி.எஃப். பணத்திற்காக நாட்கணக்கில் அலைந்து திரிவதால் நேரமும், பணமும் வீணாகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொண்டு பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து எந்தப் பலனும் இல்லாமல் ஏமாறுகின்றனர்.

மேலும் கோவை பி.எஃப். அலுவலகத்தில் சில நேரங்களில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள் இல்லாததாலும் சரியான தகவல் கிடைக்காததாலும் இந்தச் சிரமங்கள் மேலும் அதிகரிக்கின்றன.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வால்பாறை சி.ஐ.டி.யு சங்கத்தின் பொதுச் செயலாளர் P.பரமசிவம் பொள்ளாச்சி எம்.பி., வருங்கால வைப்பு நிதி ஆணையர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம் பின்வரும் மூன்று முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்

கோவை பி.எஃப். அலுவலகத்தில் வால்பாறையில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக தனி கவுண்டர் ஒன்றை உடனடியாகத் திறக்க வேண்டும்,
மாதத்திற்கு ஒரு முறை வால்பாறையிலேயே, பி.எஃப். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்,
வால்பாறையிலேயே நிரந்தரமாக கிளை அலுவலகம் (Sub-Office) ஒன்றை அமைக்க வேண்டும்.

இதற்கு ஒரு விடிவுகாலமாக மக்கள் பிரதிநிதியாக மாண்புமிகு எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் நிச்சயம் செய்து கொடுப்பார் என்று தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர். சி.ஐ.டி.யு-வின் இந்தக் கோரிக்கை குறித்து பொள்ளாச்சி எம்.பி. எடுக்கும் நடவடிக்கையைத் தொழிலாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts