Trending

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் மற்றும் பயணியர் விடுதி சாலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கொண்டு இருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் அண்ணா பஸ்நிலையம் மற்றும் மினிபஸ்கள் நிறுத்தும் பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே, கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் மற்றும் பயணியர் விடுதி சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் கோவில்பட்டி கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்று 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts